ADDED : செப் 04, 2017 09:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங் : சீனாவின் ஜியொமென் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு இன்று (செப்.,4) துவங்கி உள்ளது.
மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், உலகில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட பிரிக்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. தேசிய நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், நமது 5 நாடுகளும் வளர்ச்சியில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. உலக அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நாம் ஒன்றிணைந்து ஒரே குரலாக இருந்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். உலகின் வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்றார்.

