நைஜீரியா துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு ஆயுத கும்பலால் 35 பேர் கொலை
நைஜீரியா துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு ஆயுத கும்பலால் 35 பேர் கொலை
ADDED : பிப் 05, 2026 04:27 AM
அபுஜா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல், கிராமத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தீ வைத்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., போகோ ஹராம் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்களும், கொள்ளை கும்பல்களும் உள்ளன. அவை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொள்ளை, கடத்தல் என அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று, குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்தது. இதைக் கண்ட கிராமவாசிகள் தப்பியோட முயன்றனர்.
அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த கும்பல், அங்கிருந்த வீடுகள், கடைகள், மன்னரின் அரண்மனை உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீ வைத்து எரித்தது. இதில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். பலர், குண்டு காயங்களுடன் காடுகளை நோக்கி ஓடியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
