ADDED : ஜூன் 21, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வரும் பஸ்சில் போதைப்பொருள் கடத்துவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மும்பை அருகே வந்த அந்த பஸ்சை, அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர்.
அப்போது மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் உணவு பொட்டலங்கள் மற்றும் பழச்சாறு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்திய, 2.56 கிலோ மெத்ஆம்பெட்டமைன் மற்றும் ரேவ் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும், 544 கிராம் எக்ஸ்டசி போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு, 5 கோடி ரூபாய். போதை மாத்திரைகளை கடத்திய நைஜீரிய பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.