ADDED : மே 08, 2024 02:19 AM

லண்டன்: ரூ. 12 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் கைதாகியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் கோர்ட் மறுத்தது.
பிரபல வைரவியாபாரி நிரவ் மோடி ,50 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார்.
இது தொடர்பாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்கு பதிந்தது. 2019-ம் ஆண்டு லண்டனில் அந்நாட்டு போலீசாரால் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார்.
வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அவரை நாடு கடத்தி கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாமின் வழங்க கோரி நிரவ் மோடி ஏப். 16-ம் தேதி ஐந்தாவது முறையாக மனு செய்தார். அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
************

