sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்

/

போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்

போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்

போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்

4


ADDED : மார் 23, 2026 07:52 AM

Google News

4

ADDED : மார் 23, 2026 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை நடத்துவதற்கு போதுமான நிதி இருப்பதால், கூடுதல் வரி ஏதும் விதிக்கப்படாது என்று அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தப் போருக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. தற்போது, இந்தப் போர் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால், அமெரிக்க பார்லிமென்டில் கூடுதல் நிதியை அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் கோர உள்ளது. ஏற்கனவே, பல ஆயிரம் கோடி செலவிடப்பட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்க எதிர்க்கட்சி மட்டுமின்றி ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஈரான் போருக்கான நிதியுதவி குறித்து அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்கர்களுக்கு ஒரு உறுதியளித்துள்ளார். அதாவது, போர் செலவுகளுக்காகப் பொதுமக்கள் மீது கூடுதல் வரிச் சுமைகளைச் சுமத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, எனக் கூறியுள்ளார்.

அதேபோல, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், 'தற்போதைய மற்றும் எதிர்கால ராணுவச் செயல்பாடுகளுக்கு கூடுதல் நிதி என்பது மிகவும் அவசியம். போரின் தீவிரத்தைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்,' என்றார். அதிபர் டிரம்பின் அரசு நிர்வாகத்தினரின் இந்தப் பேச்சின் மூலம், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவது சந்தேகமாகியுள்ளது.






      Dinamalar
      Follow us