sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அடித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை: வங்கதேச போலீஸ் தகவல்

/

அடித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை: வங்கதேச போலீஸ் தகவல்

அடித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை: வங்கதேச போலீஸ் தகவல்

அடித்து கொல்லப்பட்ட ஹிந்து இளைஞர் மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை: வங்கதேச போலீஸ் தகவல்

3


ADDED : டிச 21, 2025 10:30 PM

Google News

ADDED : டிச 21, 2025 10:30 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் சமீபத்தில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மைமென்சிங் நகரை சேர்ந்தவர் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27. இவர் அங்கு உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவாமி லீக் கட்சியினரால் சுடப்பட்ட வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி இறந்த செய்தி கடந்த 18ம் தேதி இரவு வெளியானது.இதையடுத்து வங்கதேசத்தின் பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை பயன்படுத்தி மைமென்சிங் நகரில் ஒரு கும்பல் திபு சந்திர தாஸை அடித்து கொன்றது.

மேலும், நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது. அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்பியதாக அந்த கும்பல் கூறியது.இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு பற்றி வங்கதேச போலீஸ் உயரதிகாரி சம்சுஜமான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திபு சந்திர தாஸ், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் மதவெறுப்பை துாண்டும் வகையில் பதிவு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியால் ஏற்பட்ட கொடூரச் செயல் எனத் தெரிகிறது. அவருடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போதும், திபு எந்த மத வெறுப்பு கருத்துக்களையும் கூறி கேட்டதில்லை என தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

விசா மையம் மூடல்

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகரித்த நிலையில், சிட்டகாங் நகரிலுள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தின் செயல்பாடுகள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நம் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு சூழலை மறு ஆய்வு செய்த பின் மீண்டும் விசா மையம் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். சிட்டகாங்கில் இந்திய துணைத் துாதர் இல்லத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



பல்கலையின் முஜிபுர் அரங்கிற்குஓஸ்மான் ஹாதி பெயர்

வங்கதேசத்தின் டாக்கா பல்கலையின் ஒரு அரங்கிற்கு அந்நாட்டின் முதல் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபுர் ரஹ்மான் பெயர் இருந்தது. தற்போது அந்த பெயரை நீக்கிவிட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி பெயரை பல்கலை நிர்வாகம் சூட்டியுள்ளது.








      Dinamalar
      Follow us