sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சு இல்லை; வரி உயர்வு விஷயத்தில் டிரம்ப் பிடிவாதம்

/

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சு இல்லை; வரி உயர்வு விஷயத்தில் டிரம்ப் பிடிவாதம்

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சு இல்லை; வரி உயர்வு விஷயத்தில் டிரம்ப் பிடிவாதம்

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சு இல்லை; வரி உயர்வு விஷயத்தில் டிரம்ப் பிடிவாதம்

6


ADDED : ஆக 09, 2025 04:20 AM

Google News

6

ADDED : ஆக 09, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : “இந்தியாவின் வர்த்தக கொள்கை மற்றும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வது -குறித்த பிரச்னை தீர்க்கப்படாத வரை அந்நாட்டுடன் வர்த்தக பேச்சு கிடையாது,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி கொள்கையை கையில் எடுத்துள்ளார். அதன்படி அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறார்.

அமெரிக்காவுக்கு ஒரு நாடு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்தும் வாங்க வேண்டும், அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும் என்பது டிரம்பின் திட்டம்.

இதில் பற்றாக்குறை நிலவுவதாகவும், அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே இந்தியா தான் அதிக வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

அத்துடன் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைனுக்கு எதிரான போருக்கு உதவுவதாகவும் கூறினார்.

இந்த காரணங்களுக்காக ஆகஸ்ட் 1ல், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தார். இது நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

இதற்கிடையே சமீபத்தில் இதை மேலும் 25 சதவீதமாக உயர்த்தினார். அதன்படி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரும் 27 முதல், அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.இதை மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், “50 சதவீதம் வரி விதித்துள்ளதன் மூலம் இந்தியாவுடன் வர்த்தக பேச்சு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா,” என்று கேட்கப்பட்டது.

அதை மறுத்த டிரம்ப், “இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரி ஆகிய பிரச்னைகளை தீர்க்கும் வரை இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தக பேச்சும் நடத்தப்பட மாட்டாது,” என்றார்.

இதற்கிடையே அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அளித்த பேட்டியில், “இந்தியா, அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு மறைமுக நிதி உதவியாக மாறுகிறது.

“இதனால் உக்ரைனை பாதுகாக்க அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஆயுதங்கள் வழங்க செலவிடப்படுகிறது. இது எங்கள் தேசத்தின் பாதுகாப்புக்கு பிரச்னை. அதை டிரம்ப் புரிந்துகொண்டதால் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

'இந்தியா - பாக்., மோதலை

டிரம்ப் தான் நிறுத்தினார்'

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா - பாக்., இடையே சண்டை மூண்டது. 'இந்த மோதலை நிறுத்தாவிட்டால், எங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாது' என கூறி மோதலை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 25க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். இதை, பிரதமர் மோடி பார்லிமென்ட்டிலேயே சமீபத்தில் மறுத்தார். இதுநாள் வரை போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிவந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோயும் இதையே நேற்று வழிமொழிந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அதிபர் டிரம்ப் உலக அமைதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அமைதிக்கான அதிபராக உள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்ட போது, அவர் நேரடியாக தலையிட்டு அங்கு அமைதியை நிலைநாட்டினார். சமீபத்தில் கம்போடியா - தாய்லாந்து; அதற்கு முன் அஜர்பைஜான் - அர்மீனியா; காங்கோ -- ருவாண்டா இடையேயான- 30 ஆண்டுகாலப் போர் ஆகியவற்றை டிரம்ப் நிறுத்தியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்தால் அது மிகப்பெரியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us