போர்களை நிறுத்துவதில் என்னை மிஞ்ச ஆளில்லை; அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்
போர்களை நிறுத்துவதில் என்னை மிஞ்ச ஆளில்லை; அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்
ADDED : அக் 14, 2025 06:13 AM

ஜெருசலேம்; போர்களை நிறுத்துவதில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒன்பதாவது நடவடிக்கையாக, பாகிஸ்தான் - ஆப்கானி ஸ்தான் இடையேயான மோதலையும் நிறுத்துவேன் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது: நாங்கள் காசாவில் போரை முடித்து அமைதியை உருவாக்கியுள்ளோம்.
போர்களை நிறுத்துவதில் நான் திறமையானவன். சமாதானத்தை ஏற்படுத்துவதில் நான் சிறந்தவன். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் நான் நிறுத்திய எட்டாவது போர் நிறுத்தம்.
இதைத்தொடர்ந்து, ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். மேலும், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது ஒரு போர் நடப்பதாக கேள்விப்பட்டேன்.
இம்மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் உட்பட பல போர்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக டிரம்ப் கூறி வந்தார். ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுள் ஒருவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிலாரி பாராட்டு!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தத்தை முடித்ததற்கு அதிபர் டொனால்டு டிரம்பை, அவரது அரசியல் போட்டியாளரான ஹிலாரி கிளிண்டன் பாராட்டியுள்ளார்.