தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டமில்லை: சர்வதேச ஆய்வுக்கும் ஈரான் சம்மதம்

அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டமில்லை: சர்வதேச ஆய்வுக்கும் ஈரான் சம்மதம்

அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டமில்லை: சர்வதேச ஆய்வுக்கும் ஈரான் சம்மதம்

18


ADDED : செப் 26, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

18

ADDED : செப் 26, 2026 02:54 AM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அணு ஆயுதம் தயாரிக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும், சர்வதேச ஆய்வாளர்கள் வந்து தங்கள் அணுசக்தி நிலையங்களைச் சோதித்துக் கொள்ள அனுமதிப்பதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், 'பாக்ஸ் நியூஸ் டிவி'க்கு அளித்த பேட்டியில், ''எங்கள் நாட்டு மதத் தீர்ப்பின்படி அணு ஆயுதம் சட்டவிரோதமானது. எங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் எந்த திட்டமும் இல்லை.

''அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்த, யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்கத் தயாராக இருக்கிறோம். சர்வதேச ஆய்வாளர்கள் எங்கள் அணுசக்தி நிலையங்களைச் சோதித்துக் கொள்ள அனுமதிக்கிறோம்,'' என்றார்.

''மேற்காசியாவில் நடக்கும் மோதல்களுக்கு அமெரிக்கா தான் முழு காரணம். பேச்சு மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் மதிக்கவில்லை. ''அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us