ரஷ்யாவிற்கு உதவ 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு
ரஷ்யாவிற்கு உதவ 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு
UPDATED : அக் 23, 2024 09:38 PM
ADDED : அக் 23, 2024 07:15 PM

சீயோல்: உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவிற்கு உதவுவதற்காக 3 ஆயிரம் வடகொரியா ராணு வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா, அணு ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. வடகொரியாவும், ரஷ்யாவும் நட்புறவு நாடுகளாக உள்ளன. வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் இருவரும் பல முறை சந்தித்து நட்புறவை வளர்த்துக்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் தென்கொரியா பார்லிமென்ட் எம்.பி. பார்க்- சன்வொன், உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனுடன் போரிட்டு ரஷ்யாவிற்கு உதவுவதற்காக 12 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 3 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் கூடுதலாக 1500 வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் டிசம்பருக்குள் 10 ஆயிரம் வட கொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட உள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.