sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜப்பான் கடற்பகுதியில் 10 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

/

ஜப்பான் கடற்பகுதியில் 10 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

ஜப்பான் கடற்பகுதியில் 10 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

ஜப்பான் கடற்பகுதியில் 10 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

1


UPDATED : மார் 14, 2026 04:05 PM

ADDED : மார் 14, 2026 04:04 PM

Google News

1

UPDATED : மார் 14, 2026 04:05 PM ADDED : மார் 14, 2026 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

சியோல்: தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவுயது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு வடகொரியாவை நோக்கி இருக்கலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்காவும், தென்கொரியா வீரர்களும் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில்,10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அந்த நாட்டுப் படையினர் ஏவியுள்ளனர். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள சுனான் பகுதியிலிருந்து 10 ஏவுகணைகள் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை ஜப்பானில் போய் விழுந்துள்ளது.

சேதமில்லை

இது குறித்து, ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகொரியா ஏவிய ஏவுகணைகள் ஜப்பானில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணைகளால் எந்தவொரு விமானங்கள் அல்லது கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us