ADDED : அக் 31, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கியோங்ஜு:  ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு கிழக்காசிய நாடான தென்கொரியாவில் இன்று துவங்குகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்த நாட்டின் அதிபர் லீ ஜே மியுங்கை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தென்கொரியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானத்துக்கு உதவும் வகையில், அமெரிக்கா தன் மிக ரகசியமான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்ப பகிர்வுக்கான சட்டப்பூர்வ அல்லது முறையான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்த எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

