UPDATED : ஆக 01, 2024 07:05 PM
ADDED : ஆக 01, 2024 02:02 PM

பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆனது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றிருந்தனர். துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை மனுபாகர், கலப்பு இரட்டையர் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.
தற்போது இந்தியாவுக்கு 3வது பதக்கமும் துப்பாக்கிச்சுடுதலில் கிடைத்துள்ளது. 50 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 451.4 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆனது. பதக்கப்பட்டியலில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
வெண்கலம் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.