இது நடந்தால் தான் போர் முடிவுக்கு வரும்; ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
இது நடந்தால் தான் போர் முடிவுக்கு வரும்; ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
ADDED : ஜூன் 04, 2026 09:26 AM

டெஹ்ரான்: லெபனானிலும் மோதல் முடிவுக்கு வரும்போது தான், போர் முடிவுக்கு வரும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
இது குறித்து அப்பாஸ் அராக்சி கூறியதாவது: லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். எந்தவொரு போர் நிறுத்தமும் அனைத்து முனைகளிலும் சண்டைகள் முடிவுக்கு வருவதையே சார்ந்துள்ளது.
லெபனானில் மோதல்கள் முடிவுக்கு வரும்போதுதான் அமெரிக்க-இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும். போர் நிறுத்தம் தொடர்பாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகவும் நாங்கள் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். மோதல்களைத் தனித்தனியாகக் கையாள முடியாது.
ஈரானை உள்ளடக்கிய எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் லெபனானையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.இவ்வாறு அராக்சி கூறினார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களை விட, அமெரிக்கக் கடற்படை முற்றுகையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
