கனடாவில் காலிஸ்தானியர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ஹிந்துக்கள், சீக்கியர்கள் போராட்டம்
கனடாவில் காலிஸ்தானியர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ஹிந்துக்கள், சீக்கியர்கள் போராட்டம்
UPDATED : நவ 05, 2024 10:07 PM
ADDED : நவ 05, 2024 10:03 PM

ஒட்டாவா: கனடாவில் ஹிந்துக் கோயிலில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள ஹிந்துக் கோயிலில் இருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிராம்ப்டன் நகரில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் அடக்கம். இது அங்கு சிறிய அளவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இரு சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கனடாவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை ஹிந்துக்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.பிராம்ப்டன் நகரில், ஹிந்து சபை கோயிலுக்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மற்றொரு பேரணியும் இதற்கு முன்பு நடந்தது.