இலங்கையில் மீட்பு பணி முடித்து நாடு திரும்பிய நம் வீரர்கள்
இலங்கையில் மீட்பு பணி முடித்து நாடு திரும்பிய நம் வீரர்கள்
ADDED : டிச 06, 2025 12:45 AM
கொழும்பு: இலங்கை சென்ற என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப்படை, மழை வெள்ள மீட்புப் பணிகளை முடித்து நாடு திரும்பியது.
நம் அண்டை நாடான இலங்கை, 'டிட்வா' புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயலால் அங்கு 486 பேர் உயிரிழந்துள்ளனர்; 341 பேர் காணாமல் போயுள்ளனர்.
'ஆப்பரேஷன் சாகர் பந்து' என்ற திட்டத்தின் கீழ், அந்நாட்டுக்கு நம் நாடு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
அதன்படி உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நம் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் மோ ப்ப நாய்களுடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். கடந்த மாதம் 29 முதல், 80 வீரர்கள் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினர்.
கொச்சிகாடே, புத்தளம், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நம் வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்தவர்களை அவர்கள் மீட்டனர்.
இந்நி லையில், இலங்கையில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, நம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நேற்று நாடு திரும்பி னர்.

