sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்

/

பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்

பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்

பஹல்காம் தாக்குதல்: பாக்.கிற்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டம்


UPDATED : ஏப் 26, 2025 10:29 PM

ADDED : ஏப் 26, 2025 10:28 PM

Google News

UPDATED : ஏப் 26, 2025 10:29 PM ADDED : ஏப் 26, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மண்டு: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேபாளம், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் நாடு முழுதும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை கண்டித்து உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.

லண்டன்

Image 1410653பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அந்நாட்டை கண்டித்து பதாகைகளை கொண்டு வந்தனர்.

ஆஸ்திரேலியா

Image 1410654ஆஸ்திரேலியாவிலும் பாகிஸ்தானை கண்டிக்கும் வகையில் பல வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி வந்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

நேபாளம்

Image 1410655நமது அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் மற்றும் அந்நாட்டை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானை கண்டித்து கோஷம் போட்ட அவர்கள், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் உருவப்படத்தை எரித்தனர். பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்று பட வேண்டும் என வலியுறுத்தினர்.இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.






      Dinamalar
      Follow us