தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்க மண்ணில் மீண்டும் அசிங்கப்பட்ட பாக்., பிரதமர்

 அமெரிக்க மண்ணில் மீண்டும் அசிங்கப்பட்ட பாக்., பிரதமர்

 அமெரிக்க மண்ணில் மீண்டும் அசிங்கப்பட்ட பாக்., பிரதமர்


ADDED : பிப் 21, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: காசா அமைதி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனிமைப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமரின், 'அவமானத்தின் உச்சி மாநாடு' என சர்வதேச மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் கிண்டல் செய்து வருகின்றன.

இஸ் ரேல் - ஹமாஸ் போரால் உருக்குலைந்த பாலஸ்தீனத்தின் காசாவை மீண்டும் மறுசீரமைக்கவும், நிர்வகிக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமையில் காசா அமைதி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த அமைப்பின் முதல் கூட்டம், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், காசாவுக்கான பாகிஸ்தான் திட்டங்களை விளக்குவதற்கு பதிலாக, கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமெரிக்க அதிபரை பாராட்டினார். டிரம்பை அமைதியின் மனிதர் என்றும், தெற்காசியாவின் ரட்சகர் என்றும் ஷெரீப் கூறினார்.

ஆனால் , பாகிஸ்தான் பிரதமரின் இந்த வித்தைகள் எதுவும் டிரம்பிடம் பலிக்கவில்லை. இக்கூட்டத்தில் ஷெரீப், முக்கியத்துவம் அற்றவராகவும், ஓரங்கட்டப்பட்டும் தனித்து காணப்பட்டார். குழு புகைப்பட நிகழ்வில் கூட ஓரத்திற்கு தள்ளப்பட்டார்.

டிரம்ப் பேசும்போது, ஒரு கட்டத்தில் ஷெரீப்பை சுட்டிக்காட்டி எழுந்து நிற்க சொன்னார். அவர் எழுந்து நின்ற போது, இந்திய பிரதமர் மோடியை சிறந்த மனிதர் என்றும் மிக நல்ல நண்பர் என்றும் புகழ்ந்தார்.

அப்போது அசவுகரியத்தால் ஷெரீப் நெளிந்தார். மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரையும் புகழ்ந்து அவரை ஒரு சிறந்த மனிதர் என்று கூறினார்.

பாகி ஸ்தான் தன் உலகளாவிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்த முயன்ற அக்கூட்டத்தில், ஷெரீப் தனிமைப்படுத்தப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 40 நாடுகள் பங்கேற்ற இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, பார்வையாளராக மட்டுமே இருந்தது. இதில், பாகிஸ்தானுக்கு கி டைத்தது என்னவோ வெறும் தர்ம சங்கடமே.

காசாவில் நிறுத்தப்பட உள்ள அமைதிப்படைக்கு தன் படைகளை அனுப்ப பாகிஸ்தான் தயக்கம் காட்டியதே, டிரம்பின் இந்த செயலுக்கு காரணமாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us