மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு; ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியது பாக்.
மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு; ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியது பாக்.
ADDED : நவ 09, 2025 08:58 PM

இஸ்லாமாபாத்; பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் கிளர்ச்சி படையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ரயிலானது குவெட்டா மற்றும் பெஷாவர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நீண்ட தூரம் செல்லக்கூடிய ரயிலாகும்.
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தாக்குலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபரில் ரயில் பாதையில் குண்டு வைத்து தாக்க, 6 பெட்டிகள் தடம்புரண்டன.
இந் நிலையில் தொடரும் இத்தகைய தாக்குதல்கள் எதிரொலியாக, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நவ.9ம் தேதி முதல் நவ.12 தேதி வரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாளங்கள், ரயில்வே சொத்துகள், பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே கூறி உள்ளது.

