இந்தியா உடன் உறவை மேம்படுத்த வேண்டும்; பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் விருப்பம்
இந்தியா உடன் உறவை மேம்படுத்த வேண்டும்; பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் விருப்பம்
ADDED : ஜன 03, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: 'இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும்' என இந்தியாவுக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் டார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் டார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும். இதற்கான சூழலை இந்தியா உருவாக்குவது அவசியம். வங்கதேசத்துடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்.
எங்கள் சகோதர நாடான வங்கதேசத்துடன் எங்கள் உறவை வலுப்படுத்த நாங்கள் உண்மையிலேயே எதிர்நோக்குகிறோம். பிரச்னைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் முன்னேறுவதற்கு அந்தப் பிரச்னைகளை தீர்த்து வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

