பெண்களை காத்திட போராடும் ஹிந்துக்கள்: பாகிஸ்தானில் நடக்குது சல்லாப வேட்டை
பெண்களை காத்திட போராடும் ஹிந்துக்கள்: பாகிஸ்தானில் நடக்குது சல்லாப வேட்டை
ADDED : செப் 13, 2024 12:36 PM

கராச்சி: ஹிந்து இளம் பெண்களை கடத்தி முதியவர்களுக்கு திருமணம் செய்யும் போக்கு பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சிந்து மாகாணம் ஹூங்கூரு என்ற கிராமத்தில் இருந்து 16 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்றது. பின்னர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதுடன் ஹிந்து பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்தனர்.
இது தொடர்பாக ஹூங்கூரு பகுதியில் வாழும் பாக்., தராவார் இடிஹிஸ் தலைவர் சிவாபகீர் காச்சி கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் இதுபோன்ற இளம் பெண்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. ஹிந்து மக்கள் ஏழைகளாக உள்ளனர். இங்கு நடக்கும் குற்றத்திற்கு எதிராக நீதி கிடைக்க கடுமையாக போராடி வருகிறோம். இங்குள்ள சட்டப்படி பெண்களை மீட்க பெரும் சிரமப்படுகிறோம். சமீபத்தில் ஒரு பெண் கடத்தப்பட்டதை போலீசார் உதவியுடன் 9 மாதங்களுக்கு பின்னர் மீட்டோம். ஆனால் மீண்டும் அந்த பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டது. நேற்று கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினர். அங்குள்ள முஸ்லிம் மதகுரு மறுத்து விட்டார். இவ்வாறு காச்சி கூறினார் .
மொத்தம் 50 லட்சம் ஹிந்துக்கள்
கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் ஒரு ஹிந்து இளம்பெண் கடத்தப்பட்டார். இவர் இங்குள்ள கோர்ட் உத்தரவின்படி மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்க கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் உத்தரவிட்டது. ஹிந்து பெண்கள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவியும் செய்திட ஹிந்து சிந்து பவுன்டேஷன் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 2023 சென்சஸ் தகவலின்படி பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 2.17 சதவீதம் பேர் ஹிந்துக்கள். மொத்தம் 50 லட்சம் ஹிந்துக்கள் வசிப்பதாக ஒரு அறிக்கை தருகிறது.