தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரான ஏவுகணை சோதனை வெற்றி

 பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரான ஏவுகணை சோதனை வெற்றி

 பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரான ஏவுகணை சோதனை வெற்றி


ADDED : மே 15, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: நீண்ட துார இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, 'பத்தாஹ் - 4' என்ற தரையில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடந்தாண்டு செப்டம்பரில், 750 கி.மீ., வரை சென்று தாக்கும் பத்தாஹ் - 4 ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முழுதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பத்தாஹ் - 4 ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்தியது. இது வெற்றிகரமாக அமைந்ததாகவும் கூறியுள்ளது.

அதிநவீன வழிசெலுத்துதல் கருவிகளுடன் கூடிய இந்த ஆயுத அமைப்பு, தொலைதுார இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us