ADDED : ஏப் 03, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கராச்சி : பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அதிபராக இருப்பவர் ஆசிப் அலி சர்தாரி, 69.
இவர் கராச்சி அருகேயுள்ள நவாப்ஷாவுக்கு ரம்ஜான் தொழுகைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு சுவாசப் பிரச்னையுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நவாப்ஷாவில் இருந்து கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன.
அதில் சர்தாரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

