பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய தொழிலதிபர்கள்: நெட்டிசன்கள் கிண்டல்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை ஏமாற்றிய தொழிலதிபர்கள்: நெட்டிசன்கள் கிண்டல்
ADDED : ஜன 21, 2026 08:03 PM

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பீட்சா ஹட் நிறுவனத்தின் பெயரில் மோசடியாக சிலர் ஆரம்பித்த கிளையை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திறந்து வைத்தார். இதற்கு, தங்களுக்கும் தொடர்பு இல்லை என அந்த நிறுவனம் மறுக்க பாகிஸ்தான் அமைச்சரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக பீட்சா கடை திறக்கப்பட்டது. இது, அமெரிக்காவில் பிரபலமான 'பீட்சா ஹட்' நிறுவனத்தின் விளம்பரப்படுத்தப்பட்டு கடையின் முன்பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்தக் கடையை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திறந்து வைத்தார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.
இது சம்பந்தப்பட்ட பீட்சா ஹட் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்தது. தங்களது நிறுவனத்தின் பெயரில், வேறு யாரோ திறந்தது கண்டு அதிர்ச்சியடைந்த நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டது.
அதில்,, சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் திறக்கப்பட்டுள்ள பீட்சா ஹட் என்ற கிளை எங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அது அங்கீகாரமின்றி திறக்கப்பட்டுள்ளது. அந்த கடை திறக்கப்பட்டுள்ளது. எங்களின் பெயர், நிறுவனம்தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சரை கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். அமைச்சர் ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நிர்வாகத்தால் சரிபார்க்கப்படாதது குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானில் மட்டுமே பாதுகாப்பு அமைச்சர் ஒரு போலி பீட்சா ஹட் கடையை பெருமையுடன் திறந்துவைக்க முடியும். அமைச்சர் ரிப்பன் வெட்டி கேமராக்களை பார்த்து சிரித்துவிட்டு நடந்து சென்றார். பின்னர் அது அங்கீகரிக்கப்படாதது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அளவிலான திறமையை யாராலும் பகடி செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இனி ஏதேனும் உண்மை இருக்கிறதா நமக்கு வித்தியாசமான மற்றும் பயனற்ற மனிதர்கள் வழங்கப்பட்டு விட்டீர்களா? என மற்றொருவர் கூறியுள்ளார்.

