sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ

/

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ

15


ADDED : மே 02, 2025 11:57 AM

Google News

ADDED : மே 02, 2025 11:57 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததை, அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதியுதவி அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பெனாசிட் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ பேட்டியில் கூறியிருப்பதாவது:பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.இவ்வாறு அந்த பேட்டியில் கூறினார்.

நேற்று மாலை மிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'பாகிஸ்தான் அமைதியான நாடு. இஸ்லாம் அமைதியான மதம். நாங்கள் போரை விரும்பவில்லை' என்று பேசினார்.






      Dinamalar
      Follow us