பிரிட்டன் தடையை மீறி போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது
பிரிட்டன் தடையை மீறி போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது
ADDED : அக் 07, 2025 06:42 AM

லண்டன்: பாலஸ்தீன ஆதரவு குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து லண்டனில் போராட்டத்தில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
அப்போது முதல், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கடந்த ஜூலை மாதம், 'பாலஸ்தீன ஆக் ஷன்' என்ற அமைப்பினர் நடத்திய போராட்டங்களின்போது, பிரிட்டன் ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டன.
எனவே இந்த அமைப்பு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப் பட்டது.
இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனின் டிராபால்கர் சதுக்கத்தில் நுாற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.