பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர்
பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர்
UPDATED : செப் 04, 2024 05:46 PM
ADDED : செப் 04, 2024 03:26 PM

பாரீஸ்: பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிளாரி வெள்ளி வென்றார்.
இப்போட்டியில் ஆடவர் பிரிவில் பங்கேற்ற சச்சின், 16.32 மீ., குண்டு எறிந்து பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் 3-0 ஆண்டுகளுக்கு பிறகு குண்டு எறிதலில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனை செய்தார். மேலும் இப்போட்டியில்
இது இந்தியாவுக்கு கிடைத்த 21வது பதக்கம் ஆகும்.
பிரதமர் பாராட்டு
இதனிடையே, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்று நமது வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், உறுதியால் இது நிகழ்ந்து உள்ளது. இவ்வாறு அதில் பிரதமர்மோடி கூறியுள்ளார்.