பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்
பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்
ADDED : செப் 02, 2024 05:25 PM

பாரிஸ்: பாராலிம்பிக் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பைனலில் இந்திய வீரர் நிதேஷ்குமார் வெற்றிப்பெற்று தங்கம் வென்று அசத்தினார். இது நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது தங்கம்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல்.3) பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியலை எதிர்கொண்டார். இதில் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் டேனியலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா வெல்லும் 2வது தங்கப் பதக்கம் இது. ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலில் அவ்னி லேகரா தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா, 22வது இடத்தில் உள்ளது.