sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!

/

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!


UPDATED : ஆக 05, 2024 01:35 PM

ADDED : ஆக 05, 2024 01:22 PM

Google News

UPDATED : ஆக 05, 2024 01:35 PM ADDED : ஆக 05, 2024 01:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நோஹா லைலெஸ், சரித்திரம் படைத்த கார்ல் லீவிஸ், உசைன் போல்ட் வரிசையில் இடம் பெற்று விட்டார்.

100 மீட்டர் ஓட்டம்


பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி ஆக.,11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் முடிய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நோஹா லைலெஸ். இவர் நடந்து முடிந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.784 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.

இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் 10 வினாடிக்குள் இலக்கை எட்டியது ஒலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனையாக உருவாகியுள்ளது.

கார்ல் லீவிஸ்


100 மீட்டர் ஓட்டத்தில் புதுப்புது வீரர்கள் அறிமுகமானாலும், சிலர் மட்டுமே புகழின் உச்சிக்கு செல்கின்றனர். அந்தவகையில், 1984ல் மிகவும் பிரபலமான ஓட்டப்பந்தய வீரராக வலம் வந்தவர் கார்ல் லீவிஸ். ஒலிம்பிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இவர், 9 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 1984, 1988 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

1984 ஒலிம்பிக்கில் 9.99 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். அதேபோல, 1988ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 9.92 வினாடியில் இலக்கை எட்டி 2வது இடமே பிடித்திருந்தார். ஆனால், 9.79 வினாடியில் முதலிடத்தை பிடித்த ஜான்சன் என்ற வீரர் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கினார். இதனால், கார்ல் லீவிஸை தேடி தங்கப் பதக்கம் வந்தது.

உசேன் போல்ட்


இவருக்கு அடுத்தபடியாக, ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் கொடிகட்டி பறந்தவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இதுவரையில் இவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 09.690 வினாடிக்குள் இலக்கை அடைந்தது உலக சாதனை. இதன்மூலம், உசேன் போல்ட் மின்னல் வேக மனிதன் என்ற பெயரை பெற்றார். 2012 ஒலிம்பிக்கில் 09.630 வினாடியிலும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 09.810 வினாடியிலும் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 8 தங்கத்தை வென்றுள்ளார்.

டோக்கியோ


2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இத்தாலியைச் சேர்ந்த மார்செல் ஜேகப்ஸ் 9.80 வினாடிக்குள் இலக்கை எட்டினார்.






      Dinamalar
      Follow us