ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்; இறுதிப்போட்டிக்கு மனு பாகர் தகுதி
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்; இறுதிப்போட்டிக்கு மனு பாகர் தகுதி
ADDED : ஆக 02, 2024 05:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாகர், 25 மீ., பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று (ஆக.,02) தகுதி சுற்றில் மனு பாகர் இரண்டாவது இடம் பிடித்து, நாளை மதியம் நடக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து இவர் இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மனு பாகர், தனி நபர் பிரிவில் முதல் வெண்கலம் வென்றார். பிறகு, கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.