பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது
பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது
UPDATED : ஜூலை 27, 2024 03:46 PM
ADDED : ஜூலை 27, 2024 01:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஓலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரண்டு இந்திய அணிகளும் தோல்வியடைந்தன. தகுதி சுற்றில் ரமிதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6வது இடத்தை பிடித்தது.
இளவேனில் வளரிவன் மற்றும் சந்தீப் சிங் 12வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
முன்னேற்றம்
துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பான்வார் தகுதி சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.