ADDED : ஜன 06, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா: வங்கதேசத்தில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்; ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் வரும் 27 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, எதிர்கட்சி அறிவித்திருக்கிறது. இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜெஸ்ஸோரில் இருந்து டாக்கா நோக்கி சென்ற பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 பெட்டிகளில் பயங்கரமாக தீ பற்றியது. இதில் சிக்கி, இரு சிறுவர்கள் உட்பட, 5 பேர் உடல் கருகி பலியாகினர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.