குமரி, நெல்லை மக்களே உஷார்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை
குமரி, நெல்லை மக்களே உஷார்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை
UPDATED : நவ 01, 2024 02:27 PM
ADDED : நவ 01, 2024 02:26 PM

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 5ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், இதனால், அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, தேனி, திருச்சி, கரூர் , புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாகப்பட்டினம் , விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
நவ., 3ம் தேதி
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.