தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ நேபாள கலவரத்துக்கு காரணமான நபர் கைது

நேபாள கலவரத்துக்கு காரணமான நபர் கைது

நேபாள கலவரத்துக்கு காரணமான நபர் கைது


ADDED : ஏப் 12, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வலியுறுத்தி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர்.

இதில் வன்முறை வெடித்ததால், அரசு வாகனங்கள் தீக்கிரையாகின. வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் இருவர் பலியாகினர்.

இந்த விவகாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கலவரம் ஏற்பட காரணமாக இருந்த துர்கா பிரசாய் என்பவரை, அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமின் எல்லைப்பகுதியில் தன் பாதுகாவலர்களுடன் தலைமறைவாக இருந்தபோது உள்ளூர் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின், நேபாள போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us