நடுவானில் விமானத்தின் கதவு கழன்று விழுந்தது: பயணிகள் அதிர்ச்சி
நடுவானில் விமானத்தின் கதவு கழன்று விழுந்தது: பயணிகள் அதிர்ச்சி
UPDATED : ஜன 06, 2024 06:25 PM
ADDED : ஜன 06, 2024 11:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பயணித்த விமானம் ஒன்றின் கதவு திடீரென கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஆன்டரியோ நகரை நோக்கி 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் விமானம் ஒன்று கிளம்பியது. விமானம், 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென அதன் கதவுகள் கழன்று கீழே விழுந்தது.
இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், இதனை வீடியோவாக பதிவு செய்தனர். உடனடியாக, விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.