தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்

19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்

19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்


ADDED : பிப் 28, 2026 11:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 19 வெளிநாட்டு பார்லிமென்ட்களில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இது குறித்து ஓர் சிறப்பு அலசல்.

பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்து வெளிநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டு பயணத்தின் போது பிரதமர் மோடி அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்தித்து பேசுவதையும், அங்குள்ள பார்லிமென்டில் உரையாற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி உரையாற்றிய பார்லிமென்ட் பின்வருமாறு:

* 2014 ஆகஸ்ட்-- நேபாள பார்லிமென்ட்

* 2014 நவம்பர்- பிஜி பார்லிமென்ட்

* 2014 நவம்பர்- ஆஸ்திரேலியா பார்லிமென்ட்

* 2015 மார்ச்- இலங்கை பார்லிமென்ட்

* 2015 மார்ச்- மொரீஷியஸ் பார்லிமென்ட்

* 2015 மே- மங்கோலியா பார்லிமென்ட்

* 2015 நவம்பர்- பிரிட்டன் பார்லிமென்ட்

* 2015 டிசம்பர்- ஆப்கானிஸ்தான் பார்லிமென்ட்

* 2016 ஜூன்- அமெரிக்க பார்லியின் இரு அவைகளின் கூட்டக்கூட்டம்

* 2018 ஜூலை- உகாண்டா பார்லிமென்ட்

* 2019 ஜூன்- மாலத்தீவு பார்லிமென்ட்

* 2023 ஜூன் - அமெரிக்க பார்லியில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம்

* 2024 நவம்பர்- கயானா பார்லிமென்ட்

* 2025 ஜூலை- நமீபியா பார்லிமென்ட்

* 2025 ஜூலை- அமெரிக்க பார்லியின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம்

* 2025 ஜூலை- டிரினிடாட் மற்றும் டொபாகோ பார்லிமென்ட்

* 2025 ஜூலை- கானா பார்லிமென்ட்

* 2025 டிசம்பர் - எத்தியோப்பியா பார்லிமென்ட்

* 2026 பிப்ரவரி- இஸ்ரேல் பார்லிமென்ட்

பிப்ரவரி 2026ம் ஆண்டு நிலவரப்படி, பிரதமர் மோடி 79 நாடுகளுக்கு 99 சர்வதேச பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன், 7 நாடுகளின் பார்லி கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். இந்திரா, 4 நாடுகளின் பார்லியிலும், ஜவஹர் லால் நேரு, 3 நாடுகளின் பார்லியிலும், ராஜிவ், வாஜ்பாய் ஆகியோர் தலா 2 நாடுகளின் பார்லியிலும் உரையாற்றியுள்ளனர்.''இதுவரை 19 நாடுகளின் பார்லிமென்ட்களில் மோடி உரையாற்றியுள்ளார். பிற நாடுகளின் பார்லிமென்ட்களில் காங்கிரஸ் பிரதமர்கள் நிகழ்த்திய உரைகளின் கூட்டுத்தொகையை காட்டிலும், மோடி ஒருவரே அதிகமான உரைகளை நிகழ்த்தியுள்ளார்.''பிரதமர் மோடி உரையாற்றும்போது, உலகமே உற்றுக் கவனிக்கிறது. இது, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மரியாதை, தார்மீக அதிகாரம், ராஜதந்திர ரீதியான நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது,'' என்று, பாஜ தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us