sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : பிப் 24, 2026 08:31 PM

Google News

ADDED : பிப் 24, 2026 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து பிரதமர் அந்தோணி ஆல்பானீஸ் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆஸ்திரேலிய பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீஸ். கான்பராவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். அந்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்கு பிரதமர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்தோணி அல்பானீசை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து வீட்டில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மிரட்டல் போலிஎன தெரியவந்தது. இதனையடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு வீட்டிற்கு அந்தோணி அல்பானீஸ் திரும்பினார்.

ஆஸி., பிரதமர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர்கள், அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சமீப நாட்களாக ஆஸி., பிரதமர் மட்டும் அல்லாமல், பல்வேறு எம்பிக்களுக்கும் மிரட்டல் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த வகையில் மிரட்டல் வந்துள்ளது என்பது குறித்து போலீசார் கூறவில்லை.






      Dinamalar
      Follow us