நைஜீரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
நைஜீரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
UPDATED : நவ 19, 2024 03:34 PM
ADDED : நவ 17, 2024 06:39 AM

அபுஜா: அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று (நவ.,17) அபுஜா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு அளித்தனர்.
இந்தியா, நைஜீரியா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் அவர் உரையாற்றுகிறார்.
இந்திய வம்சாவளியினர் வரவேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நன்றி, அதிபர் டினுபு. நைஜீரியா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் எனக்கு அளித்த, வரவேற்புக்கு நன்றி. எனது வருகை நம் நாடுகளுக்கு, இடையிலான இருதரப்பு நட்பை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.