ADDED : ஆக 29, 2026 09:42 PM

தாஷ்கன்ட்: பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பணயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு நேற்று சென்றார். தாஷ்கன்ட் விமான நிலையத்தில் அவரை, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் வரவேற்றார்.
மத்திய ஆசிய நாடுகளுடனான துாதரக உறவுகளை வலுப்படுத்தவும், அப்பிராந்தியத்துடனான தொடர்பை மேலும் நெருக்கமாக்கவும் பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாஷ்கன்ட் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றார். இது உஸ்பெகிஸ்தானுக்கான பிரதமர் மோடியின் நான்காவது பயணம்.
தாஷ்கன்டில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும், ‘ஓரியன்டல் ஸ்டீஸ்’ பல்கலையில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் தொடர்பு, ராணுவம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிபர் மிர்சியோயேவுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்த பின், கிர்கிஸ்தான் அதிபர் சதீர் ஜபரோவ் அழைப்பின் பேரில் பிஷ்கெக் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
