ADDED : அக் 22, 2024 09:41 PM

கசான்: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானை சந்தித்தார்.
16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்ய சென்றடைந்தார். அங்கு கசான் நகரில் அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்தார். அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்தார். இதையடுத்து ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
சீன அதிபரை சந்திக்கிறார்
நாளை ( அக்.,23) சீன அதிபர் ஜி -ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். முன்னதாக இந்திய-சீன எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளிடயே உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாளைய சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.