UPDATED : ஜூலை 26, 2025 12:00 PM
ADDED : ஜூலை 26, 2025 11:34 AM

புதுடில்லி : உலகின் அதி நம்பிக்கையான தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பு இருப்பதாகவும், இவரை இந்திய மக்கள் பலர் நம்பிககைக்கு உரியவராக கருதுவதாகவும் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேற்கூறிய தகவலை பா.ஜ.,வின் அமித் மால்வியா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். the Morning Consult Global Leader Approval Tracker என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் நபராகவும், இரண்டாவதாக தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்க் ( 59 சதவீதம் ) , 3வதாக அர்ஜென்டினா அதிபர் ஜாவீஸ் மில்லி ( 57 சதவீதம் ) , 4வதாக மார்க் கார்ஜே (56 சதவீதம்) , 5வதாக ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பானீஸ் (54 சதவீதம்) , 6வது நபராக மெக்ஸிகன் அதிபர் கிளவுடியா ஷின்பாயூம் (53 சதவீதம்), 7 வது இடத்தில் சுவீஸ் அதிபர் கரீன் கெல்லர் ஷட்டர் (48 சதவீதம்) , அமெரிக்க அதிபர் டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் 8வது இடத்தையும், 9 வது நபராக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (41 சதவீதம்), 10 வது நபராக இத்தாலி ஜார்ஜியா மெலோனி (41 சதவீதம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.