போலீசார் துரத்திய கார் விடுதிக்குள் புகுந்து பலி 4
போலீசார் துரத்திய கார் விடுதிக்குள் புகுந்து பலி 4
ADDED : நவ 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடந்தது. இதையடுத்து போலீசார் கார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர்.அதனால் அவர்கள் காரை வேகமாக ஓட்டியதால் அவர்களை போலீசாரும் காரில் துரத்தினர். 22 வயது இளைஞர் ஓட்டிய கார், தம்பா நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் புகுந்ததில் அங்கு நின்ற 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய இளைஞரை கைது செய்த போலீசார் சிறையி லடைத்தனர்.

