பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்தார் போப் பிரான்சிஸ்
பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்தார் போப் பிரான்சிஸ்
ADDED : மார் 02, 2025 09:22 PM

வாடிகன் சிட்டி: தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ், 88 ,பிப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் சுவாசக் கோளாறுகளுடன் அனுமதிக்கப்பட்டார், அவருக்க இரட்டை நிமோனியா என்று சொல்லப்பட்டது. இரு நுரையீரல்களிலும் கடுமையான தொற்றால் அவருக்கு சுவாசிக்க கடினமாக இருந்தது.
17வது நாளாக மருத்துவமனையில் நிமோனியாவால் போராடி வரும் போப் பிரான்சிசை இன்று இரண்டு வாடிகன் அதிகாரிகள் சந்தித்தனர். அவர்களிடம் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் போப் நன்றி தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறியதாவது:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸிற்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது. வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை.
போப் இரவு நேரத்தை அமைதியாக கடந்துவிட்டார். சுவாச பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை.
போப் பிரான்சிஸ், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் 3 வாரமாக வழிநடத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் இன்று வாடிகனில் 2வது அதிகாரியும், பரோலின் துணைவருமான கார்டினல் பியட்ரோ பரோலினை, மருத்துவமனையில் அவரை சந்தித்தனர். அப்போது அவர், உங்கள் அனைவரின் பாசத்தையும், நெருக்கத்தையும், நான் உணர்கிறேன். கடவுளின் அனைத்து மக்களாலும் ஆதரிக்கப்படுவது போல் உணர்கிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு மெட்டியோ புருனி கூறினார்.