ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
ADDED : டிச 10, 2025 10:24 PM

டோக்யோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் இன்று (டிசம்பர் 10) நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்தியதரைக் கடலியல் நில அதிர்வு மையம், இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானது என்றும், இந்த நிலநடுக்கம் 57 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், கடந்த இரு நாட்களுக்கு முன் ஆமோரி மாகாண கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.உடனடியாக பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
வடக்குக் கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள், வரவிருக்கும் வாரத்தில் ஏற்படக்கூடிய பெரிய பின் அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தனர்.

