அதிபர் டிரம்ப் மிகவும் கவலை அடைந்தார்; அமெரிக்கா சொன்ன காரணம் இது தான்!
அதிபர் டிரம்ப் மிகவும் கவலை அடைந்தார்; அமெரிக்கா சொன்ன காரணம் இது தான்!
ADDED : நவ 13, 2025 06:56 AM

வாஷிங்டன்: தனது உரையை பிபிசி வேண்டுமென்றே மற்றும் நேர்மையற்ற முறையில் திருத்தியதால் அதிபர் டிரம்ப் மிகவும் கவலைப்பட்டார் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நிருபர்களிடம் கூறியதாவது: பிபிசி ஒரு இடதுசாரி பிரசார இயந்திரம். துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் வரி செலுத்துவோரால் மானியம் வழங்கப்படுகிறது என அதிபர் டிரம்ப் மிக தெளிவாக கூறியுள்ளார். இது பிரிட்டன் மக்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அதிபர் உரை நேர்மையற்ற முறையில் திருத்தப்பட்டது. மிகவும் தெளிவாக போலியான செய்தி என தெரிந்தது. தனது உரையை பிபிசி வேண்டுமென்றே மற்றும் நேர்மையற்ற முறையில் திருத்தியதால் அதிபர் டிரம்ப் மிகவும் கவலைப்பட்டார்.
அதிபர் டிரம்பின் சட்ட ஆலோசகர் பிபிசிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். அது தொடரும். அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம். இவ்வாறு கரோலின் லீவிட் கூறினார். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த புகாரில், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
தற்போது இது குறித்து அமெரிக்காவின் கருத்துக்களை கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

