ADDED : ஆக 01, 2025 12:20 AM

வாஷிங்டன்: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாட்டின் பெரும் எண்ணெய் வளத்தை மேம்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கடலோர பகுதிகளில் எண்ணெய் சேர்மானம் இருப்பதாக நீண்ட காலமாக அந்நாடு கூறிவரும் நிலையில், அதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்காத அந்நாடு, கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
தற்போது இந்த வளங்களை அமெரிக்கா பயன்படுத்தப் போகிறதா என்ற கேள்வியை, டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு கிளப்புகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் ெஷபாஸ் ெஷரீப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
6 நிறுவனத்துக்கு தடை இதற்கிடையே, தடை விதிக்கப்பட்ட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வணிகம் மேற்கொண்டதாகக் கூறி, இந்தியாவின் ஆறு நிறுவனங்கள் மீது டிரம்ப் அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
கான்சன் பாலிமர்ஸ், ஏ.ஐ.,கெமிக்கல் சொலுஷன்ஸ், ராம்நிக்லால் கோசலியா அண்டு கம்பெனி, ஜுபிடர் டை கெமிக்கல், குளோபல் இண்டஸ்டிரியல் கெமிக்கல்ஸ், பெர்சிஸ்டன்ட் பெட்ரோசெம் ஆகியவை அவை.