எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள்; தம்பட்டம் அடிக்கிறார் அதிபர் டிரம்ப்!
எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள்; தம்பட்டம் அடிக்கிறார் அதிபர் டிரம்ப்!
ADDED : அக் 24, 2025 08:36 PM

வாஷிங்டன்: 'அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான்' என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அவர் வரி விதிக்காத துறையே இல்லாத அளவுக்கு அனைத்திற்கும் வரி விதித்துள்ளார்.
மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப, எனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

