தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அணு ஆயுத சோதனை அதிபர் டிரம்ப் உத்தரவு

அணு ஆயுத சோதனை அதிபர் டிரம்ப் உத்தரவு

அணு ஆயுத சோதனை அதிபர் டிரம்ப் உத்தரவு


ADDED : அக் 31, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அணு ஆயுத சோதனையை துவங்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க துவங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.

சீனா தன் அணு ஆயுத பலத்தை விரைவாக அதிகரித்து வருவதாக தெரிவித்த டிரம்ப், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்துவிடும் என எச்சரித்தார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டிவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us