உக்ரைனுக்கு 'டோமாஹாக்ஸ்' ஏவுகணை வழங்க தயக்கம் காட்டும் அதிபர் டிரம்ப்
உக்ரைனுக்கு 'டோமாஹாக்ஸ்' ஏவுகணை வழங்க தயக்கம் காட்டும் அதிபர் டிரம்ப்
ADDED : அக் 19, 2025 04:01 AM

வாஷிங்டன்: 'டோமாஹாக்ஸ்' ஏவுகணைகளை உக்ரைனு க்கு வழங்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் தயக்கம் காட்டுவதாக தகவல்க ள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன.
சந்திப்பு இருப்பினும், ரஷ்யா இவை எதற்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து உக்ரைனுடன் போர் புரிந்து வருகிறது.
இதையடுத்து, போரை நிறுத்துவதற்காக ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பேச்சு நடத்தினார்.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் டிரம்புடன் சந்திப்பு நடத்தினர்.
ஆனாலும் போர் நிறுத்தத்திற்காக முன்னெடுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, புடின் உடன் டிரம்ப் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர். இதில், இரு தலைவர்களும் மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தம் குறித்து பேச்சு நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த சந்திப்பு ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடக்கும் எனவும் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குள் இச்சந்திப்பு நிகழும் என தெரிவித்த டிரம்ப், தேதியை குறிப்பிடவில்லை.
புடினுடன் நடந்த பேச்சையடுத்து, டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, நீண்ட துாரம் சென்று தாக்கும், 'டோமாஹாக்ஸ்' ஏவுகணை தங்களுக்கு வழங்கும்படி அமெரிக்காவிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். ஆனால், இந்த ஏவுகணைகளை வழங்க டிரம்ப் தயக்கம் காட்டி யதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடினுடன் தான் நடத்திய பேச்சு குறி த்து, ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் பகிர்ந்து கொண் டதாக கூறப்படுகிறது-.
டிரம்புடன் தொலைபேசியில் பேசுகையில், உக்ரைனுக்கு தொலைதுாரம் சென்று தாக்கும், 'டோமாஹாக்ஸ்' ஏவுகணைகளை வழங்குவதற்கு புடின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அமெரிக்க - ரஷ்ய உறவுகள் பெரிதும் பாதிக்கப்படும் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே, தற்போது ஏவுகணை வினியோகம் சரியாக இருக்காது என்று கருதி டிரம்ப் தயக்கம் காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
முடிவு இதையடுத்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதால், 'டோமாஹாக்ஸ்' ஏவுகணை தற்போது அவர்களுக்கு தேவைப்படாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
போதுமான அளவு ரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. தற்போது, போர்க்களத்தில் இருக்கும் இடத்திலேயே இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டும். இருவருமே வெற்றி பெற்றதாக அறிவிக்கட்டும்.
போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று, தங்கள் குடும்பத்தினரை சந்திக்கட்டும். போர் நிறுத்தத்திற்கு தேவையான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த இதுவே சரியான நேரம்.
இவ்வாறு தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, டிரம்ப் சொன்னதைப் போல் தற்போது இருக்கும் நிலையிலேயே போரை நிறுத்த வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம் எனவும், இதற்கு பின் பேச்சு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இருப்பினும், போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை என தெரிவித்த அவர், பேச்சு நடத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.