ADDED : ஏப் 02, 2026 06:11 PM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அந்நாட்டு பார்லிமென்டில் பேசினார். அப்போது, அமெரிக்காவை தாக்கக்கூடிய ஏவுகணையை தயாரிக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். டிரம்பின் இத்தகைய கருத்தை அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இது, 'மிகைப்படுத்தப்பட்ட ஒன்று' எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பான டி.ஐ.ஏ.,வின், 2025ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஈரானின் தற்போதைய செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களில் இருந்து, ராணுவ ரீதியிலாக செயல்படக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்க, அந்நாட்டுக்கு 2035 வரை ஆகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா அல்லது வடகொரியா தொழில்நுட்ப உதவியை வழங்கினாலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரிக்க ஈரானுக்கு எட்டு ஆண்டுகள் வரை ஆகும் என, கூறப்படுகிறது.
